ண்பாடு, மக்களின் உள நடத்தை அமைப்புக்களின் இடையேயான உள்ளுணர்வில் பொதிந்துள்ள மிகச்சிறந்த இயல்பினை விவரித்து, ஒரு இனத்திற்குறிய வாழ்வியல் பண்புக்கூறுகளை வரையறுத்து, அவரை அடையாளப்படுத்தும் தனித்துவ தன்மையினை அவரது சமூக கலாச்சார வெளிப்பாடுகளுக்கு அளிக்கும். மனிதனுக்கு மிகவும் நெருக்கமான இருத்தலியல் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் கூறுகள், இந்தப் பண்பாட்டின் அடையாள முத்திரையை தாங்கி நிற்கும். தென்னிந்தியாவின் மூன்று சங்க காலத் துறைமுக நகரங்கள், மக்கள் மற்றும் பண்பாட்டின் தற்கால நிலையை, கடல்வழித் தொடர்புகள் மிகுந்திருந்த வரலாற்றுச்சூழலில் கண்டுணர்ந்து, தற்காலத்தில், அவற்றின் முக்கியத்துவத்தை, பன்-முகக் கலாச்சார தொடர்பின் அடிப்படையில் புகைப்படக்கண் கொண்டு காண ப்ராஜெக்ட் 365 விழைகின்றது.

தமிழ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் முயற்சியான ப்ராஜெக்ட் 365, பரந்த புகைப்பட காப்பகம் உருவாக்கி வளர்ப்பதன் வழியாக பழங்கால வரலாற்றினூடே நிலைத்து வாழும் மரபுகளிம் பொருள் பொதிந்த தடங்களையும் இணைப்புகளையும், கூட்டு நினைவுத் தொகுப்பாக்கும் பண்பாட்டுக் கூட்டாமை ஆகும். எடுத்துக்காட்டாக, மூன்று சங்ககால துறைமுக நகரங்களான தொண்டி (திண்டிஸ் பொன்னானி பகுதி), முசிறி (முசிரிஸ் கொடுங்கல்லூர் பகுதி), கொற்கை (தூத்துக்குடி பகுதி)யின் பன்முக் கூறுகள் ஆவணப்படுத்தப்பட்டு, பொதுமை புகைப்பட காப்பகத்தில் பாதுகாக்கப்படும். இந்த ஆவணங்களின் மிக முக்கியமான உட்பொருளாவது, நாட்டுரிமை எல்லைகளினால் பிரிக்கப்பட்டிருக்கும் பண்பாடுகளை இணைக்கும் “நீர்”; அது இல்லையெனில், சுதந்திரமாக செயல்படும் தன்மை கொண்டுள்ளதனால், இந்நாடுகள் தனித்தே நின்றிருக்கும். மண்ணால் மூடப்பட்டு மறைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சங்ககால துறைமுக நகரங்களின் வரலாற்று மெய்மைகளால் உருவாக்கப்பட்டுள்ள நிகழ்காலத்தின் உண்மை நிலை, இடம்-காலம் எல்லைகளைத தாண்டி நீடித்து நிற்கும் பண்பாட்டு மரபுகளும் வழக்கங்களும் புகைப்பட வடிவில் உருவாக்கப்படும். வரலாற்றின் சுவடுகளில் நின்று, புகைப்படைக் கருவி உள்வாங்கும் நிகழ்காலத்தின் பிம்பங்கள், வரும்காலத்திற்கென பாதுகாத்து வைக்க வேண்டிய ஓர் அரிய கலாச்சார சொத்துகளாகும். வெறும் புனைவான எடுத்துக்காட்டு அல்லது தகவல் வெளிடுதல் முறையில் அல்லாமல் மேன்மை மிக்க தொடர்வரிசை சரித்திரக் கதைப்பாணியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரலாறு, நம்பிக்கை கோட்பாடுகள், பழங்கால நீர்த் தடங்கள், நாட்டுப்படம், போர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் அளித்த தகவல்கள் அடிப்படையில், உட்பதிக்கப்பெற்ற தனித்தன்மையுள்ள கலைநயமுடைய புலனுணர்வுடன், கிழக்கு கடற்கரையின் பருவ மழைக்கால புயல் காற்று, அஸ்தமனங்கள், வெள்ளப்போக்கு, போன்ற பல்வேறு அம்சங்களை ஒன்றாகத் தொகுத்து அகல்பரப்பு காட்சி வடிவத்தில் உருவாக்கப்படும். அதன் உள்ளார்ந்த நிலையில் காமெரா பதிவு செய்யும் பண்பாட்டுக் கட்டமைப்புகள் யாதெனில், இந்தத் துறைமுக நகரப் பிரதேசமெங்கிலும் பரவி ஊடாடி நிற்கும் இலக்கியம், இசை, நாடகம், புராணம், பழம்பாட்டிக் கதை, நம்பிக்கைக் கோட்பாடுகள், எண்ண வடிவங்கள், தாய்நாட்டு புலமையறிவு, சந்தித்த ஏமாற்றங்கள் போன்றவை ஆகும்.

அரேபியா, ரோம், எகிப்து போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளுடன், மூன்று துறைமுக நகரங்களான திண்டிஸ், முசிரிஸ், கொற்கை கொண்டிருந்த வாணிக, பண்பாட்டு மற்றும் கருத்துப் பரிமாற்ற இணைப்பு, இரண்டாயிரம் வருட பழமையுடையது. சங்க கால பண்டைத்தமிழகம் (தற்கால தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் வடக்கு ஸ்ரீலங்கா) “பட்டு தடத்துடன்” (silk route) விஞ்சிய வெல்திறனுடன் கூடிய நெருக்கமான வணிக தொடர்பினை சிறப்பாக பராமரித்து வந்தது. கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை முசிரிஸ் சிறந்தத் துறைமுக நகரமாக செயல்பட்டு வந்தது. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடுத்தடுத்து வந்த வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு, காணாமல் போய்விட்ட இந்த பட்டிணத்து குடியிருப்பு, தற்கால கொடுங்கல்லூர் பகுதிகளில் இருந்தது. சேர அரசாங்கத்தின் கீழிருந்த திண்டிஸ், அரேபியா நாடுகளுடனான வணிகத்தில் பெரும் பங்கு வகித்தது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் இருந்த கொற்கை, பாண்டிய அரசாங்கத்தின் தலைநகராக இருந்ததோடல்லாமல், அவர்களின் மிகவும் செழிப்பான, மாட்சிமைப் பொருந்திய வாணிக மையமாகவும் திகழ்ந்தது. சங்க இலக்கியம் மற்றும் பல்வேறுபட்ட ஐரோப்பா பயணக் குறிப்புகளில் இந்த பிராந்தியத்தின் புகழ்பெற்ற “முத்து” பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. செழித்தோங்கிய கடல்வழி வர்த்தகத்தால் இந்த நகரங்கள் அனுபவித்து வந்திருந்த ஆதிக்கம் படிப்படியாக குறைந்தது. தற்பொழுது, தமது வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், தனித்துவ அடையாளத்தையும் படிப்படையாக மறக்கும் ஒரு பிரதேசமாக வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் முதலாம் கட்டத்தில், உள்ளூர் வரலாறு மற்றும் வாய்வழிக் கலையறிவு பரிமாற்றங்கள், முன்னோடியான பன்முக இணைதிறன் வரலாற்றினை கடந்த காலத்திற்கான சுட்டிகளாக்கி, இந்த பிரதேசத்தின் சமகால கட்டமைப்புகளுடன் இணைத்து புகைப்படங்கள் உருவாக்கப்படும். கலாச்சார முகப்பில் இந்த மூன்றுத் துறைமுக நகரங்களும், அவற்றின் கடல் கடந்த வாணிக நடவடிக்கைகளும் உருவாக்கிய இன்றும் என்றும் நீடித்து நிற்கும் தாக்கத்தின் சுவடுகளை கண்டுணர்வதே, இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம்.

புகைப்படத்துறைக்கென வழக்கமாக விவரிக்கப்பட்டுள்ள ஆவணப் பணியிலிருந்து, புகைப்படக்கலை பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. தினசரி வாழ்க்கையின் ஆயிரக்கணக்கான உறைந்த தருணங்களைக் கொண்ட காட்சி அமைப்பினை உருவாக்குவதன் மூலம், மிகப்பிரபலமாகி, ஜனப்பிரியை பெற்று, இசைக்கு ஒத்த ஈர்ப்புத் தன்மையை இந்த ஊடகம் பெற்றுள்ளது. இந்த ஜனாபிமானத்தினை விரிவுப்படுத்தி, தன்னுடைய சொந்த மண்ணின் கடந்தகால மற்றும் தற்காலக் கதைகளை புகைப்படங்களாக்கி, இந்த நவீனக்கலைக்கு புது வடிவம் கொடுத்து, முழுமையாக்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம். பொது மக்களின் பங்களிப்புடன், சமகால புகைப்பட நடைமுறையில் உள்ள புதிய சாத்தியங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளை உள்ளூர் புகைப்பட கலைஞர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் எடுத்துரைக்கவும் இந்த ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளை முற்படுகிறது. மக்களை தமது சொந்த மண்ணின் தொட்டறியக்கூடிய மற்றும் புலனாகாத கலாச்சார சொத்துக்களை அடையாளம் காணவும், உருவாக்கவும், பாதுகாக்கவும், அவரவர் பிரேதேசம் சார்ந்த ‘திறந்த புகைப்பட களஞ்சியம்’ அமைக்கவும் இந்தத் திட்டம் ஊக்குவிக்கின்றது. இந்தத் தருணத்தில், நம்மோடு கடல்வழித்தொடர்புக்கொண்டிருந்த வெளிநாட்டு குழந்தைகளுடன், நம் தேசத்து குழந்தைகளை இணைய தளம் மூலமாக நேரிடைத் தொடர்புக் கொண்டு, புகைப்படத் திறன் வளர்க்கும் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிரும் இருமுக ஆக்கப்பூர்வத் தொடர் பட்டறை நடத்தப்படும். இதன் முன்னோடியாக, கடந்த ஏப்ரல் மாதம் போலாந்து நாட்டு சிறுவர்களுடன் தமிழ்நாட்டு சிறுவர்கள் தொடர்புக்கொண்டு பாரம்பரிய புகைப்பட அச்சுகள் மூலமாக கூட்டாக வடிவங்கள் உருவாக்கினர்.

தனிப்பட்ட அடையாளத்தின் மீதான பிரச்சினைகளினால் அளவுக்கதிகமாக ரத்தம் சிந்தப்படும் இந்தக் காலக்கட்டத்தில், எல்லைகளுக்கிடேயேயான பூகோள அரசியல் ஊடுருவல்கள் மற்றும் கலாச்சார பண்புக் கலப்பிழைவு நமக்கு நினைவுப்படுத்துவது யாதெனில், அடையாளங்களைச் சார்ந்த இருப்புநிலை கருத்துகளை ஒழுங்குப்படுத்துவது வெற்று கூற்றாகும்; அவைகளை தேர்ந்தெடுக்கும் ஈர்ப்புகள் தவறான இறுமாப்பினால் தான் இன்றும் நிலைக்கின்றன என்பதே. பலநூற்றாண்டுகளாக நடைபெறும் இடம்பெயர்வு, குறுக்கேற்றம், கலப்பு போன்றவற்றால் கலாச்சார கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சமச்சீரற்ற மாறும் தன்மை, வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள இன்றியமையாவாத அடையாள கருத்திற்கும், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈர்ப்புகளுக்கும் எதிராகத்தான் எப்பொழுதும் செயல்படுகிறது; மாறாக, அதன் வரையறைகள், எல்லையினால் குறிப்பிடப்படும் தடங்களையும் தாண்டி, ஒவ்வொரு மக்களின் சமூக கட்டமைப்பில் பொறிக்கப்படுகின்றன.